• A
  • A
  • A
வீரப்பன் என்கவுண்டருக்கு உதவிய சண்முகப்பிரியா...14 ஆண்டுகளாக அரசு உதவிக்காக காத்திருப்பதாக வேதனை

கோவை: வீரப்பனை என்கவுண்டர் செய்ய உதவிய சண்முகப்பிரியா என்ற பெண் 14 ஆண்டுகள் ஆகியும் மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிதி உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், அரசின் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர்களை கொல்வதற்கு தமிழக கர்நாடக அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.


இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல்துறையினர் தங்க வைத்தனர்.

அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன், வீரப்பன் மனைவியுடன் நெருங்கி பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும்படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.



முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். குறிப்பாக வீரப்பன் நடமாட்டம் குறித்தும், வீரப்பனுக்கு கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை சேகரித்து அதிரடி படையினருக்கு கொடுத்தார் சண்முகபிரியா.

இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

2004 இல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரப்பனை என்கவுண்டர் செய்ய முக்கிய தகவல்கள் அளித்த சண்முகப்பிரியாவிற்கு மத்திய அரசின் சார்பில் 5 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை சண்முகபிரியாவிற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலம், பரிசுத்தொகை போன்றவை எதுவும் வழங்கப்படவில்லை.



பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக போராடி வருவதாகவும் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை கிடைக்கவில்லை எனவும் சண்முகபிரியா கூறுகிறார்.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப பிரச்சினை போன்ற பல சிக்கல்களில் இருப்பதாக கூறும் சண்முகபிரியா தனக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்