• A
  • A
  • A
எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றாவிட்டால் ஓட்டு கேட்டு வர முடியாது: கிருஷ்ணசாமி

திருச்சி: தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றவில்லை என்றால் அரசியல் கட்சிகள் ஓட்டு கேட்டு வர முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டிற்கு டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.


அப்போது அவர் பேசுகையில், எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் விருப்பத்துடன் உள்ளனர். இதற்காக புதிய தமிழகம் சார்பில் கடந்த ஓராண்டில் 3 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையின் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவேந்திர குல மக்களின் பொறுமையை சோதித்து பார்க்க கூடாது. இதை பரிசீலனை செய்ய என்ன தயக்கம்? நாங்கள் சலுகைகள் வேண்டாம் என்று கூறி தான் வெளியேற விரும்புகிறோம். மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? மத்திய அரசு கூறினால் மாநில அரசு செய்யாதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வரிடம் இதுகுறித்து 3 முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் அரசுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். இல்லையென்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என எந்த கட்சியும் ஓட்டு கேட்டு தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமத்திற்குள் நுழைய முடியாத சூழ்நிலை உருவாகும் .

20 நாடாளுமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு 25 முதல் 75 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளது. தேவேந்திரகுல வேளாளர்களை ஆதிதிராவிடர், ஹரிஜனர், கூலித் தொழிலாளர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே அரசியல் கட்சிகள் பார்க்கின்றன.

கடந்த ஓராண்டு காலமாக பதவிக்காக போட்டிகள் நடக்கிறது. இதற்கான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அனைத்தும் ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்காகவே நடக்கிறது. தேர்தல் வந்தால் நான் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்ற மனப்பான்மை கூடாது. சென்னை கோட்டையிலும், டெல்லி கோட்டையிலும் புதிய தமிழகத்தின் கட்சி கொடி பறக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேறுவதால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கனவே உள்ள சமூகத்தினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

மாநாட்டில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி உள்பட நிர்வாகிகள் பலர் பேசினர்.

இந்த மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் எனவும், நவம்பர் 15 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் ஹை கவுன்சில் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்