• A
  • A
  • A
திருடப்பட்ட கதையா 'சர்கார்' : உதவி இயக்குநர் புகார்!

ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாம் முறையாக விஜய் நடித்துள்ள படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில், வரலெட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா ஆகியோரும் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர்.


சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகின்ற தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறியுள்ளார். 'செங்கோல்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை 2007 ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதனை திருடி உருவாக்கப்பட்டதே சர்க்கார் படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வருண் ராஜேந்திரனின் புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கத்தி' திரைப்படத்தின் கதையும் திருடப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது 'சர்க்கார்' படத்திலும் இந்த சர்ச்சை தொடர்வது குறிப்பிடத்தக்கது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்