• A
  • A
  • A
உங்கள் பார்வையில் இதுபோன்று தெரிகிறதா?

சில நேரங்களில் நீர்க்குமிழி போன்று தோன்றுவது ஏன்? இது ஆபத்தானதா?



சில நேரங்களில் ஓர் வெளிச்சமான இடத்தில் பார்க்கும்போது நீர்குமிழி மிதப்பது போன்று தெரியும். கண்களை வேறுபுறம் திருப்பினால் அந்த குமிழ்களும் சேர்ந்து மிதந்தவாறு நகரும். இந்த உருவங்கள் பல்வேறு வடிவங்களில் தோன்றும். இது பற்றி தெரியுமா?






இது என்ன?

விட்டெரஸ் ஹூமர் எனப்படும், கண்களில் இருக்கும் ஜெல் போன்ற நீர். இது லென்ஸ் - ரெட்டினா இடையிலான காலியிடத்தை நிரப்பி கண்களுக்கு உருளையான வடிவத்தை தருகிறது. இதில் ஹையலுரோனிக் ஆசிட் மற்றும் கொலோஜன் கலந்திருக்கும். ஹையலுரோனிக் ஆசிட் நீரின் மூலக்கூறுகளை சேர்த்து பிடித்திருக்கும். எப்போவாவது அந்த பிடிப்பு உடைந்தால் அந்த காலியிடம் ஒளி படும்போது நிழலை பிரதிபலிக்கும். இந்த நிழல் தான் குமிழ் போன்று பார்க்கும் காட்சியில் தோன்றும்.

இதன் பெயர் 'ஹை- ஃப்லோடர்ஸ்' (eye floaters)என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது ஆபத்தானதா?

-முன்னதாகவே அவ்வப்போது இது தெரிந்திருந்தால் பிரச்சனை இல்லை. முற்றிலும் பாதுகாப்பானது.

-சராசரியாக தோன்றும் அளவை விட, திடீர் என்று அதிகமாக தோன்றினாலோ, பார்வையை இது மறைத்தாலோ உடனடியாக மருத்துவரை அனுகவும்.

-இது புதிதாக தோன்றினால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.

-முற்றிய நிலையில் பார்வைக்கு முக்கியமான ரெட்டினா திரையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ரெட்டினாவை கிழிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.







CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்