• A
  • A
  • A
ரஜினியை விட்டு கமலை இயக்கினார்: அதனால் தான் அவர் இயக்குநர் சிகரம்..!

தமிழ்சினிமாவின் பிதாமகனும் இயக்குநர்களின் சிகரமாக விளங்கும் பாலச்சந்தரின் பிறந்தநாள் விழா இன்று...தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலம் துவங்கி ரஜினி-கமல், விஜய்- அஜித் என கடந்து விஜய்சேதுபதி- சிவகார்த்திகேயன் வரையில் ஹீரோக்களே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

ஹீரோக்கள் மீதான பிரமிப்பை தங்களுடைய இயக்கத்தினால் ரசிகர்களை தன்வசம் திருப்பியவர்கள் இயக்குநர்கள். தங்களுடைய அசாத்திய திரை மொழியால், இயக்குநர்களையும் கொண்டாட வைத்த இயக்குநர்கள் வரலாறும் இங்குண்டு.

பிம்சிங் துவங்கி பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மணிரத்னம், பாலா, அமீர், வெற்றிமாறன், ராம், பா.ரஞ்சித் என இயக்குநர்களும் வரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.

திரையரங்குகளில் ஹீரோக்களுக்கு இணையாக மேற்சொன்ன இயக்குநர்களுக்கும் முதல் நாள் ஷோ பார்க்கும் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள்.

நமது அண்டை மாநிலமான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமல்ல பாலிவுட்டிலும் இந்த நிலை இல்லை. இப்போதுதான் இயக்குநர்கள் கதைகளை நம்பி படம் இயக்குவதையே தெலுங்கில் பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் பிள்ளையார் சுழியை தமிழில் போட்டவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். தொடக்க காலத்தில் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி, இயக்கியும் இருக்கிறார். அதில் குறிப்பிட்ட நாடகம் தான் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் மற்றும் நீர்க்குமிழி. திரைவிலகிய பின்பு அரங்கேறிய இந்த நாடகங்கள் பின்னாளில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின.

1965 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தெய்வத்தாய் படத்தில் வசனம் எழுதியதன் மூலம் திரையுலகில் நுழைந்தார் பாலச்சந்தர். பின்னர் அதே ஆண்டு வெளியான நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

பாலசந்தருடைய சிறப்பு என்னவென்றால் அவர் நடிகர்களுக்கு கதை எழுதியதில்லை. அவருடைய கதைக்கு நடிகர்களை தேர்ந்தெடுத்தார். எம்ஜிஆரை வைத்து இதுவரை படம் இயக்காத பாலசந்தர், சிவாஜியை வைத்து எதிரொலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் அந்த படத்திலும் சிவாஜி கதையின் நாயகனாகவே நடித்திருப்பார். கதைகளை நம்பி மட்டுமே இவர் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். என்ன தான் ரஜினிகாந்த் தான் அறிமுகப்படுத்தியவர் என்றாலும், அவர் மாஸ் ஹீரோவாக வளர்ந்த பிறகு அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று கர்ஜித்தவர்.

காரணம் ரஜினிகாந்த் என்ற நடிகருக்கு கதை எழுத வேண்டும் என்பதனால்.. ஆனால் கமல்ஹாசனை வைத்து அவர் பெரிய நடிகராக வளர்ந்த பிறகும், அவர் வெறும் நடிகராக இருந்ததன் காரணமாக வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.பாலச்சந்தரை அடுத்த தமிழ்சினிமாவில் இயக்குநர்களுக்காக படம் பார்க்கும் கலாச்சாரம் உருவானது.அவரைத் தொடர்ந்து வந்த மகேந்திரன், பாலுமகேந்திரா முதல் இன்று படம் இயக்கும் தியாகராஜா குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், மிஸ்கின், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள். அதனால் தான் அவர்களின் பெயர்கள் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.

பெரிய மாஸ் ஹீரோவான ரஜினியை இயக்கியும் கூட பா.ரஞ்சித் தன்னுடைய பாணியில் இருந்து விலகாமல், படத்திற்கு இயக்குநர் தான் கேப்டன் என்பதை நிருபித்துள்ளார். அதனால், தற்போது இயக்குநர்களுக்கு கட் அவுட் வைக்கும் காலம் பிரகாசமாக உள்ளது.

மேலும், அவருக்கு பின்னரே தமிழ்சினிமாவில் கதையை மட்டுமே நம்பி படம் இயக்கும் நிறைய நம்பிக்கைக்குரிய இயக்குநர்கள் கிடைத்தார்கள்.

தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்திய படங்களை, அவள் தொடர் கதை, மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பெண்ணியம் சார்ந்த படங்களையும் இயக்கி அதற்கும் ஆரம்புள்ளி இவரே. அதன் தொடர்ச்சியே இறைவி, தரமணி, மகளீர் மட்டும் என இன்று வரையில் தொடர்கிறது.தமிழ்சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. அவர்களின் பெயர்களை குறிப்பிட்டால் இந்த கட்டுரை முழுவதையும் ஆக்கிரமித்து விடுவார்கள்.

அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,விவேக், நாசர், சார்லி, உள்ளிட்ட ஏராளமான பெருமைக்குரிய அறிமுகங்களை தமிழ்சினிமாவுக்கு தந்தவர். மேலும், ரோஜா படம் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் தனது கவிதாலயா புரொடக்ஷன் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.

இதன் மூலம் இன்று சிறப்பான இடத்தில் தமிழ்சினிமாவை அடிப்படையிலிருந்தே கட்டமைத்த பெருமைக்குரியவர் பாலச்சந்தர். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களை இயக்கியுள்ளார்.

சினிமா மட்டுமில்லாமல் ஏராளமான டிவி தொடர்களையும் தயாரித்து இயக்கியுள்ள இவர், பத்மஸ்ரீ, தாதா சாகிப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்த நாள் காணும் இயக்குநர் பாலச்சந்தரை பெற்றதன் மூலம் தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியா சினிமாவுக்கே பெருமை. ஏனெனில் அவர் இயக்குநர்களின் சிகரம்..!CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்