• A
  • A
  • A
குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவை சிதைத்த ஒரு 'ஷூ'வின் கதை!

ஸ்ரீகாகுளம்: குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், கனவுமாகிய மகனுக்கு தந்தை ஆசையாய் வாங்கி கொடுத்த கருப்பு நிற பாய்ண்டட் ஷூ உயிரை பறித்த அதிர்ச்சி சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரம்மம். தனியார் மில் தொழிலாளி. பல நோய்களின் தாக்கம் இருந்தும், தன்னம்பிக்கையோடு வேலைக்கு சென்று, தன்னுடைய சிறு ஊதியத்தில் குடும்பத்தை வழிநடத்தி வந்தார். மனைவி லட்சுமியும் சிக்கனமாக இருந்து வந்தார்.

இவரின் மூன்று குழந்தைகளில் இரண்டுபேரை நோய் விழுங்கி கொண்டது. அதனால் மூன்றாம் மகனான சுரேஷ் மீது முழு அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்தனர்.

முதல் இரண்டு குழந்தைகளின் இழப்பால் மனமுடைந்த தாய் லட்சுமி, மூன்றாவது மகனை இரண்டு குழந்தைகளின் வடிவில் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது மகனான சுரேஷ் தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தான்.

கல்லூரிக்கு செல்லும் சுரேஷ் ஃபார்மல் ஷூ வாங்கி தரும்படி, தந்தை பிரம்மத்திடம் கேட்டுள்ளார். கல்லூரி வாழ்க்கை முடித்து விட்டால், வேலைக்கு சென்று தங்களது கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடுவான் எனும் எதிர்பார்ப்பால் தன் மகன் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார் தந்தை பிரம்மம்.

அது ஒரு கருப்பு கலரில் கூர்மையானதாக இருக்கும் பாய்ண்டட் ஷூ.

தன் தந்தை வாங்கி கொடுத்த அனைத்தையும் அணிந்து கொண்டு தன் தாய் தந்தையிடம் சென்று வருகிறேன் என்று கூறி 2ம்நாளான கல்லூரிக்கு புறப்பட்டான். அவர்களது பெற்றோருக்கு தெரியவில்லை தன் மகனை பார்ப்பது இது தான் கடைசி முறை என்று.

ஸ்ரீககுளம் முதல் தனது கல்லூரி பேருந்து நிறுத்தம் ஆன ராஜம் பேருந்து நிலையம் வரை பேருந்தில் வந்து இறங்கியுள்ளான்.

பின் கல்லூரிக்கு நேரம் நெருங்கவே, பாலம் ஏறி கடந்தால் தாமதமாகும் என ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார் சுரேஷ்.

அது பாலசா டூ விசாகப்பட்டினம் செல்லும் ரயில் பாதை, ரயில் வருவதற்குள் கடந்து விடலாம் என்று கடக்க முயன்றபோது, தன் கருப்பு நிற பாய்ண்டட் ஷூ ரயில் தண்டவாளத்துக்குள் மாட்டி கீழே விழுந்துள்ளார். ஷூ இருக்கமாக தண்டவாளத்துக்கும் தரையில் கொட்டப்பட்டுள்ள கற்களுக்கும் நடுவில் சிக்கியுள்ளது.

தன் ஷூவை விட்டுவிட்டு காலை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் காலும் இருக்கமாக மாட்டியுள்ளது. அவரது முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே, தூரத்தில் வந்த கூட்ஸ் ரயில் அருகில் நெருக்கமாக வந்துள்ளது.தன் காலை எடுக்கமுடியாமல் தவித்த அந்த இளைஞனை ரயில் மோதி இரண்டு துண்டாக்கியது.ரயில் மோதி மகன் இரண்டு துண்டான சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்வது அறியாத திகைத்த பெற்றோர்கள் கதறி கண்ணீர் விடத்தொடங்கினர். தனது முதல் இரண்டு பிள்ளைகளை நோயால் இழந்த அவர்களுக்கு, பெரும் நம்பிக்கையான சுரேஷ்-யின் மரணம் குறித்து நம்பமுடியாமல் கதறி அழுதுள்ளனர்.

அரை மணிநேரம் கல்லூரிக்கு தாமதமாக சென்றால் ஒன்றும் ஆகி விடாது. ஆனால் தற்போது தாய், தந்தை எனும் இரண்டு உயிர்கள் தவித்துக்கொண்டிருக்கிறது. சிறிய தவறு தானே என்று எதையும் அலட்சியமாக எடுத்து கொள்ள வேண்டாம். நம்மால் முடிந்த வரை சரியானதையே முன்னோக்கி எடுத்து வைப்போம்.

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்