• A
  • A
  • A
சிறைக்கு சென்ற பொன்னம்பலம்! நான் மட்டும் வக்கீலா இருந்தா: கமல் கொந்தளிப்பு

சூடுபறக்கும் பிக்பாஸ் சீசன் 2-இல் முதல் ஆளாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் 'பிக்பாஸ் சிறை'க்குள் சென்றார்.

pc: twitter@socialmedia



பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கடந்து இரண்டு வாரங்களாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் முதல் சீசன் பார்த்து தங்களது சுயரூபத்தை ஒழித்து கொண்டு கேமராவுக்கு முன்னால் நடிக்கிறார்கள் என பலரும் விமர்சித்து வந்தனர்.


அதில் மஹத் கேமரா இருப்பதையே மறந்து யாசிகாவுடன் காதல் மயக்கத்தில் இருந்தார்.

இந்த நிகழ்ச்சி, முதல் சீசன் போல் அல்லாமல் இந்த சீசன் சற்று விறுவிறுப்பு குறைவாக தான் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது எலிமினேஷனாக வாய்ஸ் ஸ்பெஷலிஸ்ட் அனந்த் வைத்தியநாதன் வெளியேறினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், அனந்த் வைத்தியநாதனிடம் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன்னாள் யாராவது ஒரு நபருக்கு சிறை தண்டனை கொடுக்கும் உரிமை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது என கூறினார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலத்துக்கு சிறை தண்டனை வழங்கினார். மேலும் பொன்னம்பலம் தமிழ் கலாச்சாரம் என்று அந்த காலத்தில் உள்ளார். கலாச்சாரம் மாறினால் தான் நாம் வளர முடியும் என்றும் கூறினார்.

பின், இந்த சிறை தண்டனையை விமர்சித்த கமல் கூறியதாவது,

நான் மட்டும் வழக்கறிஞராக இருந்தால் வாதாடி உங்களை வெளியே எடுத்துருப்பேன். ஆனால் நான் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்-க்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பாளர் எனவே வீட்டின் விதிமுறையில் தலையிட முடியாது என்றார்.

இதையடுத்து இந்த சீசினில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சிறையில் வில்லன் நடிகரான பொன்னம்பலம் முதல் நபராக சென்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்