• A
  • A
  • A
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை லாரி ஏற்றி கொலை செய்த மனைவி கைது

பெல்காவி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட 4 பேரை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர்.



பெலகாவி மாவட்டம் சிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் . இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜுன் 1ம் தேதி பிரகாஷ், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் சிக்கோடியின் புறநகரான உமரணி பகுதியில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.


இது தொடர்பாக பிரகாஷின் மனைவி ஸ்ரீதேவி சிக்கோடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை ஏற்று வழக்கு பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் உமரணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பிரகாஷ். வாகனத்தில் மோதி இறந்த காட்சி இருந்தது. இதையடுத்து வாகனப்பதிவு எண்ணை வைத்து .அவர்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

இதையடுத்து பிரகாஷின் மனைவி ஸ்ரீதேவியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சந்தோஷ் என்பவருடன் ஸ்ரீதேவிக்கு தவறான உறவு இருந்தது தெரியவந்தது. ஸ்ரீதேவி, சந்தோஷ் உடன் இணைந்து வாழ்வதற்காக அவரது கணவர் பிரகாஷை கொல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக சதிதிட்டம் தீட்டியுள்ளார், காதலன் பிரகாஷ் மற்றும் சிலருடைய உதவியுடன் டிப்பர் லாரியை ஏற்றி பிரகாஷை கொன்றுள்ளார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் இறந்துவிட்டதாக வெளிஉலகத்தை நம்ப வைத்துள்ளது . அவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, பிரகாஷின் மனைவி ஸ்ரீதேவி, காதலன் சந்தோஷ், மகேஷ் மற்றும் பரமு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாயின் தகாத உறவால் தந்தையை பறிகொடுத்த குழந்தை, தற்போது தாயும் சிறைக்கு சென்றுவிட்டதால் அநாதையாகியுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்