• A
  • A
  • A
இவங்கெல்லாம் தான் 'பிக்பாஸ்-2' போட்டியாளர்கள்!- 'ரீஎன்ட்ரி கொடுக்கும் முக்கிய நடிகர்கள்'

பிக்பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள நிலையில், அதன் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

pc: twitter @ikamalhaasan



கடந்த ஆண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி பலரின் கவனத்தையும் ஈர்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. கட்சி பணிகள் பரபரப்புக்கு இடையில், இரண்டாம் பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியின் டீசரை கமல் வெளியிட்டார்.


இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்சிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.

இதிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. கடந்த முறை பிக்பாசில் ஒளிப்பரப்பான காலத்தில் தங்கள் குடும்பத்தில் ஒரு நிகழ்வு போல் மக்கள் ரசித்தனர். மேலும் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது.

சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிலர் பல்வேறு காரணங்கள் கூறி இதில் கலந்து கொள்வதை தவிர்த்தும் வருகிறார்களாம். விரைவில் இதன் இறுதி பட்டியல் வெளியாகும் என்கிறார்கள்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்