• A
  • A
  • A
199 ரூபாயில் அதிரவைக்கும் ஜியோவின் புதிய திட்டம்

மும்பை: ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரடி சலுகைகளை விரைவில் அறிமுகம் செய்கிறது.



தொலைத்தொடர்புத் துறையில் போட்டிகளை உருவாக்கி, குறுகிய காலத்தில் பல கோடி வாடிக்கையாளர்களை பெற்றது ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம்.


தற்போது ஜியோ ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இந்நிலையில் வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என அடித்து தூள் கிளப்புகிறது.

சிம்கார்டைப் போட்டவுடன் வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையில், அதிகப்படியாக பில் கட்ட வேண்டிய நிலை ஏற்படாது என ஜியோ உறுதி அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் பில் கட்டணத்தை எப்போது சோதனை செய்து பார்க்க முடியும்.



இதே சலுகையை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும், வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம் ரூ.389க்கும் அளித்து வருகின்றன.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்