• A
  • A
  • A
அன்பார்ந்த தமிழ் ரசிகர்களே என்னை மன்னியுங்கள்! கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்

'மெர்குரி' திரைப்படம் உலக அளவில் வெளியாகியுள்ள நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப்புப்படம்



கடந்த சில ஒரு மாதமாக தமிழ்த்திரையுலகினர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக தமிழகத்தில் புதிய படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியீடும் தடை செய்யப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'மெர்குரி'. பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வசனமே இல்லாமல் சைலன்ட் திரில்லராக உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்தப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்ததின் காரணமாக இந்த படம் தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

'மெர்குரி' உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் 1,000 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. உலக அளவில் என்படம் வரவேற்பை பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனால், இந்த படத்தின் வியாபாரம் காரணமாக தமிழகத்தை தாண்டி இந்த படத்தன் வெளியீட்டை எங்களால் தள்ளி வைக்கமுடியவில்லை. இந்த படத்தின் இந்தி பதிப்பைக் கூட எங்களால் தமிழகத்தில் வெளியிடமுடியவில்லை.

நானும் எனது குழுவினரும் எதுவும் செய்யமுடியாமல் மிகுந்த வலியுடன் இருக்கிறோம். இந்த படம் விரைவில் தமிழகத்தில் வெளியாகும்.

தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குளை தவிர வேறு ஏதேனும் வழிகளில் இந்த படத்தினை காணமுயற்சிக்க வேண்டாம் எனும் கோரிக்கை வைக்கிறேன். இதன் மூலம் பைரசியை ஆதரிக்காதீர்கள்.

மேலும், என் அன்பார்ந்த தமிழ்ரசிகர்களே என்னை மன்னியுங்கள்

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்