• A
  • A
  • A
'ஆப்பிள்' பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபோன் 6 எஸ் பிளஸ்' வகை ஸ்மார்ட் போன்கள் விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்புப்படம்



ஆப்பிள் (Apple) நிறுவனமானது 'ஐபோன் 6 எஸ் பிளஸ்' (iPhone 6s Plus) வகை ஸ்மார்ட் போன்களை இந்திய மொபைல் மார்க்கெட்டில் இறக்குமதி செய்து ஒரு புதிய சகாப்தம் படைத்தது.


இந்த வெற்றியை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்க பெங்களூரைச் சேர்ந்த விஸ்ட்ரான் (Wistron and commercial manufacturing) என்கிற நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளது. மேலும், சோதனை முறையாக முதலில் 'ஐபோன் 6எஸ் பிளஸ்' போன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில், 'ஐபோன் 6 எஸ் பிளஸ்'-ன் விலையானது, 5-7 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது. மட்டுமல்லாது, சீன தயாரிப்பான ஒன் பிளஸ், மற்றும் தென் கொரிய தயாரிப்பான சாம்சங் ஆகியவற்றின் போட்டியை சமாளிக்க புதிய வியூகமாக இந்த உள்நாட்டு தயாரிப்பு பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜியோமி (Xiaomi) நிறுவனமும் இந்தியாவில் புதிய மொபைல் தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்