• A
  • A
  • A
என்னுடைய நாடித்துடிப்பு எகிறியது: தோனி பேச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி குறித்து கேப்டன் தோனி பேசுகையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய நாடித்துடிப்பு எகிறியதாக தெரிவித்தார்.



தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.


2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றது. இது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி:

"2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது.

அனைவருக்குமான உணர்ச்சி மட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு வீர்ர்கள் அமரும் இடத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பவுலர் மீதும் பேட்ஸ்மென் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். பாசிட்டிவ் ஆன ஆற்றல் உதவுகிறது.

ஒரு கட்டத்தில் என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது. அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன்.

இங்கு வெளியில் அமரும்போது கிடையாது. களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாகும்.

ஆம் நாங்களும் ரன் கொடுத்தோம், கொல்கத்தா நன்றாக பேட் செய்தார்கள். இரு அணி பவுலர்களுக்கும் கடினம்தான். ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.







CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்