• A
  • A
  • A
மைதானத்தில் செல்லிடப்பேசியை ஒளிரச் செய்து போராடிய ரசிகர்கள்: அதிர்ந்த போலீஸ்

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டக்காரர்கள் செல்லிடப்பேசி விளக்குகளை ஒரே நேரத்தில் ஒளிரச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை சுற்றிலும் செவ்வாய்க்கிழமை(நேற்று) தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டம், போட்டி தொடங்கியதும் மைதானத்துக்குள் நடைபெற்றது. காலணிகளை வீசுவது, கொடிகளை வீசுவது, கோஷமிடுவது என பல்வேறு வடிவங்களில் நடைபெற்றது.


காலணிகளை வீசியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்ட சுமார் 50 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போட்டி முடிவடையும் தருவாயில் மைதானம் முழுவதும் இருந்த போராட்டக்காரர்கள், தங்களது செல்லிடப்பேசிகளை ஒரே நேரத்தில் ஒளிரச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனெவே இதுபோன்ற போராட்டத்தை, மெரீனா கடற்கரையில் கடந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் நடத்தினார்கள். இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

போராட்டத்தின் காரணமாக, ஐ.பி.எல். போட்டியை காண வழக்கமாக வரும் ரசிகர்கள் கூட்டத்தை விட, இந்த முறை குறைவான கூட்டமே வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்