• A
  • A
  • A
போலீஸ் தேர்வில் தோல்வி அச்சம்- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தருமபுரி: தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பட்டத்தாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.



தருமபுரி மாவட்டம் அதியாமான் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முன்டாசு புரவடை கிராமத்தை சேர்ந்தவர், குமார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பிஏ பட்டதாரி. காவல்துறையில் சேரந்து பணியாற்றுவதை லட்சியமாக கொண்டவர்.


இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) தமிழக காவர்துறை பணிக்கு நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இவருடன் சேர்த்து 16,500 பேர் தேர்வெழுதினர்.

தேர்வு முடிந்ததும், இவர் பயிற்சி பெற்ற தனியார் பயிற்சி பள்ளி, தேர்வுக்கான விடைத்தாளை குமாரின் மொபைலுக்கு அனுப்பியது. அதை படித்த குமார், தேர்வில் தான் நிறைய தவறான பதில்களை எழுதியுள்ளதை அறிந்து மனம் உடைந்தார்.

இதனால் தான் போலீஸாக முடியாது என்ற விரக்தியில் தனது தோட்டத்தில் உள்ள புங்கை மரத்தில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பகுதியில் நடைவழியாக சென்றவர்கள் இதைபார்த்து அதியமான் கோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கெலை சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்