• A
  • A
  • A
கர்ப்பிணி பெண் மரணம்: பொதுமக்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருச்சியில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்ததால், பொதுமக்கள் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கோப்புப்படம்



திருச்சி திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனத்தை துரத்திச் சென்று தாக்கியதில் கர்ப்பிணி பெண்ணான உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.


இதேபோல், அரசு பேருந்தில் ஏற முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி தவறி விழுந்த 6-ம் வகுப்பு மாணவன் மீது பேருந்து ஏறியதில் பலியானான்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியதாவது:

திருச்சியில் உஷா என்ற பெண் உயிரிழந்ததற்கு காரணமான காவல் ஆய்வாளரின் செயல் கண்டிக்கத்தக்கது.

பொதுமக்கள் பொறுப்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை மதிக்காமல், அதை மீறுவதால்தான் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கிறது. எனவே, அனைவரும் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்