• A
  • A
  • A
மிஸ்டு கால் மூலம் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்வது எப்படி?

வருங்கால வைப்பு நிதியை சரிபார்க்க மொபைல் போனிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதுமானது.



வேலைக்கு செல்லும் பணியாளர்களின் வைப்பு நிதியை அடிக்கடி சரிசெய்வது அவசியம். இதன்மூலம் நாம் நமது கணக்கில் எவ்வளவு தொகை வைத்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது குறித்த தகவலை பெறுவதற்காக ஊழியர் சேம லாப நிதிய அமைப்பு பல வழிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.


உங்கள் வைப்பு நிதியை UMANG என்ற ஆப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ, அல்லது மிஸ்டு கால் மூலமாகவோ பெறலாம். எல்லாவற்றையும் விட எளிதானது, மிஸ்டு கால் கொடுத்து வைப்பு நிதி தகவலை அறிவது.

இதற்காக உங்களிடம் சரியான யூஏஎன்(UAN) எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருத்தல் அவசியம். உங்களது யூஏஎன்(UAN) எண் பான் கார்டுடன்/ஆதார் எண்ணுடன்/வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டும் இருந்தால், 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இந்த கால் முற்றிலும் இலவசம். உங்கள் மொபைல் எண்ணுக்கு, பி.எஃப் எண், பெயர், வயது, பிறந்த தேதி, இருப்புத்தொகை போன்ற தகவல்கள் குறுஞ்செய்தியாக வரும்.

நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், உடனடியாக அதை யூஏஎன்(UAN) எண்ணுடன் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் பணிபுரியும் அலுவலகம், தனியார் டிரஸ்ட் என்றால், இந்த வசதி மூலம் உங்களது வைப்பு நிதியை சரிபார்க்க முடியாது. அதற்கு உங்கள் அதிகாரியைதான் தொடர்பு கொள்ள வேண்டும்.

மிஸ்டு கால் வசதி வேலை செய்யவில்லை என்றால், UMANG என்ற ஆப் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ வைப்பு நிதி தொகை குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்