• A
  • A
  • A
பண்ணாரி கோவிலில் கதறி அழுத ஜெ.தீபா: தொண்டர்கள் இல்லாமல் தவிப்பு

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோவிலில் ஜெ.தீபா கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலுக்கு வழிபடுவதற்காக ஜெ.தீபா வந்திருந்தார்.


கோவிலில் ஜெ.தீபாவை வரவேற்க காத்திருந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணக்குமார், இணை மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி நிர்வாகிகளைப் பார்த்து வணக்கம் கூட தெரிவிக்கவில்லை எனவும் இதனால் இத்தகைய தலைவி நமக்கு வேண்டாம் என அனைவரும் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவிலுக்குள் சென்ற தீபா, திரும்பி வெளியே வந்த போது ஒருவர் கூட இல்லை. இதனிடையே கோவில் பிரகார மண்டபத்தில் அமர்ந்து தீபா தியானம் செய்தபடி அழுதார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவரை, நிருபர்கள் கேள்விகள் எழுப்பினார். இதனைக்கேட்டு கோபமடைந்த ஜெ.தீபா, இதற்கு பதில் கூறமுடியாது என எரிச்சலாக பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் இல்லாமல் தனியாக நடந்து வந்து காரில் புறப்பட்டு சென்றார்.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்