• A
  • A
  • A
"எல்லா பசங்களும் என்னை பெண்ணாக பாக்குறாங்க"...கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்

திருச்சி: லால்குடி அருகே சக மாணவர்கள் கேலி செய்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள நெருஞ்சல்குடியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மற்றும் திலகவதி தம்பதியினர். இவர்களின் மகன் ரஞ்சித்குமார். திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.


இந்நிலையில் வியாழக்கிழமை (நேற்று) வழக்கம் போல் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன், மாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளான்.



மாணவனின் கடிதம்

அதில் சக மாணவர்கள் தன்னை பெண்ணாகவே பார்கிறார்கள், அதனால் தான் இந்த முடிவுக்கு வந்ததாக எழுதியுள்ளார். மேலும் தன் மரணத்துக்கு காரணமான சக மாணவர்கள் 4 பேரின் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவன் படித்த பள்ளியிலும், அவனது பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பத்தாம் வகுப்பு மாணவன் இவ்வாறு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்