• A
  • A
  • A
10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் 62,907 வேலை

ரயில்வே துறையில் காலியாக உள்ள 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்



டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு மண்டல வாரியாக, இணையதளங்களில் காலி பணியிடங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்தந்த தளங்களுக்கு சென்று முழு விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.


கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளளது.

சம்பளம்: ரூ.18000/- (LEVEL 1 OF 7TH CPC PAY MATRIX)

விண்ணப்பிப்பது எப்படி?.

விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். எனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும்.

ரயில்வேயின் மண்டல வாரியாக உள்ள இணைதளத்தில், (உதாரணமாக http://www.rrbchennai.gov.in) லிங்கை கிளிக் செய்து கணக்கை உருவாக்கி விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஏற்கனவே கணக்கு உள்ளவர்கள் லாக் இன் செய்து விண்ணப்பிக்க விரும்பும் வேலைக்கான தகுதிகளை பதிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பித்த பின்பு செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.

ஆன்லைனில் 10.02.2018 முதல் 12.03.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்க இந்திய ரயில்வே தளத்தை (http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244) பார்க்கவும் /





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்