• A
  • A
  • A
விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு; மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தலைநகர் தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக போராட்டததில் ஈடுபட்டு வருகின்றனர்.


விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஓரு பகுதியாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய படி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

உடனடியாக மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்தக்கூடாது என மாணவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பல்கலைக் கழக வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களிம் போராட்டத்தால் பல்கலைக் கழக வளாகத்தில் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை .

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையை அடுத்த சூலூர் பேருந்து நிலையம் முன்பாக விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், காங்கிரஸ், கொங்குநாடு ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

வறட்சி மற்றும் கடன் தொல்லையின் காரணமாக தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்து இருப்பதாகவும், இருபது நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகள் வாங்கிய வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



//



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்