• A
  • A
  • A
"எங்கள் வாழ்க்கை அபாயகட்டத்தில் உள்ளது"

திருவனந்தபுரம்: எங்கள் வாழ்க்கை அபாயகட்டத்தில் உள்ளது என சபரிமலையில் வழிப்பட்ட கனகதுர்மா மற்றும் பிந்து ஆகியோர் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், எப்போது வேண்டுமானால் தங்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் கூறியுள்ளனர்.



சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, பல இந்துத்துவ அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சிக்கும் பெண்களை நுழையாதவாறு தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே கடந்த புதன்கிழமை 40 வயதுள்ள பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்கள் கறுப்பு உடை அணிந்து போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் பல இந்துத்துவ அமைப்புகள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் கேரளா மாநிலத்தின் பல பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் சபரிமலையில் சாமிதரிசனம் மேற்கொண்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கனக துர்கா கூறுகையில்,

"எனக்கு தெரியும், எனது வாழ்க்கை அபாயகட்டத்தில் உள்ளது. ஆனால் நான் இன்னும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறேன். நாங்கள் சென்றதன் மூலம் சபரிமலை செல்லவிருக்கும் பெண்களுக்கு எளிய வழியை ஏற்படுத்தி விட்டோம் என நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தில் எங்களுக்கும் உரிமையுள்ளது என்பதாலேயே நாங்கள் கோயிலுக்கு சென்றோம். நாங்கள் சென்றது பக்தியை குறிப்பதோடு மட்டுமில்லாமல் பாலின சமத்துவத்தையும் குறிக்கிறது. நாங்கள் கோயிலில் வருகை புரிந்ததற்கு எங்கள் குடும்பத்தாரே எதிராக இருந்தனர்" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிந்து, "சபரிமலையில் பெண்கள் தரிசிக்க கூடாது என கேரளாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் தான் போராட்டத்தில் இறங்கி உள்ளதுடன், வன்முறையை கையில் எடுத்தும் வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் எங்களுக்கு மதிப்பும், ஆதரவும் அளிக்கின்றனர் எனக் கூறினார்.

மேலும் சன்னிதானத்தில் எந்தவொரு பெண் சென்றாலும் அரசின் ஆதரவு கிடைக்கும் எனக் கூறிய பிந்து, இது தொடர்பாக முதலமைச்சரும், கேரள அரசும் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்