• A
  • A
  • A
ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி கேட்கவில்லை: நிதியமைச்சகம்

டெல்லி: நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க,ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் நிதி கேட்கவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கோப்புப்படம்



மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தப்படி நிதி வசூலாகாததால், அதனை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் அவசர கால நிதியை கேட்பதாக தகவல்கள் வெளியானது.


இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் அல்லது 1 லட்சம் கோடி ரூபாய் கேட்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. அரசு அது போன்று நிதி எதும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், நிதிப் பற்றாக்குறை சீரான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். "கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் 5.1 சதவிகிதமாக இருந்த நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 2018-19 ஆம் நிதியாண்டில் 3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது. எனவே அரசின் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பல்வேறு விவகாரங்கில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசு, ரிசர்வ் வங்கியின் அவரச கால நதியை கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வரும் நிலையில் பாஷ் சந்திர கார்க் விளக்கமளித்துள்ளார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்