• A
  • A
  • A
சசிதரூரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்: சு.சுவாமி

புதுதில்லி: சசிதரூரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

கோப்புப்படம்



காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.


அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு 'இந்து பாகிஸ்தான்'ஆக மாறிவிடும்" என கூறியுள்ளார்.

இந்நிலையில், சசி தரூரின் பேச்சை கண்டித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி காங்கிரசின் சசி தரூர் மீது இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு எதுவும் மருத்துவ உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

சசி தரூர் எதையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு விட்டாரா என்று தெரியவில்லை. அவரது கருத்துக்கள் அவரது ஏமாற்றத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

இந்து பாகிஸ்தான் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தானுக்கு எதிரானவரா? அவர் பாகிஸ்தானை மிகவும் சமாதானப்படுத்த முயல்கிறார்.

அத்துடன் இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க அவரிடம் உதவி கோருகிறார்.

அவருக்கு பாகிஸ்தானிய பெண் தோழிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ் அமைப்பின் உளவாளிகள்.

காங்கிரஸ் முதலில் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது. ஆனால் இறுதியில் அது ஒன்றும் இல்லை என்றாகி விட்டது.

அதேபோல் இப்போது சசி தரூர் விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும், இல்லை என்றால் அவர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தமாகி விடும், என்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்