• A
  • A
  • A
அனைத்து மக்களும் விமானத்தில் செல்லவேண்டும் என்பதே எனது கனவு : நரேந்திர மோடி

ராய்பூர்: அனைத்து மக்களும் விமானத்தில் செல்லவேண்டும் என்பதே எனது கனவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.



பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் சென்றுள்ளார். அங்கு ரூ.22 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,




'மற்ற மாநிலங்களைக் காட்டிலும், சத்தீஸ்கர் மாநிலம் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி நிதிஉதவி பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், கழிப்பறைகள் அமைக்க வழங்கப்பட்டுள்ளன. இங்கு வாழும் பழங்குடிமக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமானத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

என்னுடைய கனவு என்பது, அனைத்து மக்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதாகும். இதற்காகவே உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறுநகரங்களை, மற்ற நகரங்களுக்கு இணைத்துள்ளோம்.

எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்தபின், சாலை வசதிகளையும், விமானநிலையங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், முந்தைய அரசுகள் சாலைகள் கூட அமைக்கவில்லை. சத்தீஸ்கரை புறக்கணித்துவிட்டன.

இதற்கு முன் ராய்ப்பூரில் நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள் மட்டுமே வந்தன. ஆனால், இப்போது, 50 விமானங்கள் வரை வந்து செல்கின்றன.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் இங்கு ஐஐடி கல்வி நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன்படி, நாங்கள் பிலாய் நகரில் ஐஐடி கல்வி நிலையத்தை அமைத்திருக்கிறோம்.

சத்தீஸ்கர் என்றாலே வனப்பகுதி, பழங்குடி மக்கள் என்ற நிலையை மாற்றி, ஸ்மார்ட் சிட்டி என பெயர் பெற்ற நகரங்களாக மாற்றிவிட்டோம். நாட்டின் முதல் கிரீன் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கி இருக்கிறோம்'. என்றார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்