• A
  • A
  • A
முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும் முதல் அதிரடி: விவசாயக் கடன் தள்ளுபடி

பெங்களூர்: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், விவசாயக்கடன் தள்ளுபடி கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.



கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி என இரு தரப்பும் உரிமை கோரியிருந்த நிலையில், 104 எம்எல்ஏக்கள் வைத்துள்ள பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைத்தார்.


மேலும், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் அளித்துள்ளார்.

பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கிடையே கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவிற்கு, பாஜக கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்