• A
  • A
  • A
கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு: ஆளுநரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் தர்ணா

பெங்களூர்: கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அறுதி பெரும்பான்மை இல்லாத பாஜக.,வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை, அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா பதிவியேற்க அழைப்பு விடுத்தார்.


இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு மனுவை வழங்கினர். பாஜக சார்பில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத வழங்கிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் முதல்வராகப் பதவியேற்பதில் தடையில்லை என உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சித்தராமையா தரையில் அணர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்களும் தர்ணாவில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்