• A
  • A
  • A
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து - ராகுல்

புதுதில்லி: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோப்புப்படம்



கர்நாடகாவில் பல்வேறு அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் பாஜக.,வை சேர்ந்த எடியூரப்பா முதல்வராகியுள்ளார். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவையான நிலையில் 104 தொகுதிகளில் மட்டும் வெற்றிப்பெற்றுள்ள பாஜக, அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு பிறகு முதல்வர் நாற்காலியை பிடித்துள்ளது.


இந்நிலையில், இன்று வியாழக்கிழமை எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது ஜனநாயகத்தின் படுகொலை என்று விமர்சித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'பாஜக வெற்றியை கொண்டாடும் வேளையில் இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. பெரும்பான்மையில்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது' என்று பதிவிட்டுள்ளார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்