• A
  • A
  • A
கர்நாடக மாநிலத்தின் துயரமான நாள் இன்று - கவர்னரின் முடிவுக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு!

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக.,வினை கவர்னர் அழைத்த கவர்னரின் முடிவு, குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஜனநாயகத்தின் மீதான மாண்புகளைச் சீர்குலைக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

கோப்புப்படம்



கர்நாடகாவில் ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜெ.டி.எஸ் 37 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஆட்சியமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.


இந்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேபோல், 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பா.ஜ.கவின் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் வாஜுபாய் என்ன முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களைப் பிடிக்காத பா.ஜ.க.,வின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்திருக்கிறார் கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலா. இந்த முடிவு பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், கவர்னரின் முடிவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்தார். அவசர வழக்காக நேற்று இரவு 1 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இறுதியில், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இன்று காலை கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா. இதற்கிடையே கர்நாடக ஆளுநரின் முடிவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில், இன்று கர்நாடக மாநிலத்தின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். இதுமாதிரியான செயல்பாடுகள் கவர்னர் என்ற பதவியின் உயர்வைக் கீழிறக்கிவிடும். ஆளுநரின் இந்த முடிவு குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஜனநாயகத்தின் மீதான மாண்புகளைச் சீர்குலைக்கும், என கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்