• A
  • A
  • A
13 வயது மணமகனுக்கு 23 வயது மணமகள் லிப்லாக்!

கர்னூல்: ஆந்திராவில் 13 வயது சிறுவனை 23 வயது பெண், வயது வித்தியாசத்தை கடந்து காதல் திருமணம் செய்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் போலீசுக்கு பயந்து காதல் தம்பதி பெற்றோருடன் மாயமாகியுள்ளனர்.



ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகே உள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். இவரின் உறவினர் கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23).


இருவரும் உறவினர் என்பதால் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது இவர்களுக்குள் இடையே வயது வித்தியாசம் பார்க்காமல் காதல் மலர்ந்துள்ளது.

ஒருக்கட்டத்தில் மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது.

இவர்களின் திருமணத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த இருதரப்பு பெற்றோர்கள், பின்பு இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம், ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்