• A
  • A
  • A
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: இந்த ஆண்டு பருவ மழை 97 சதவீதம் இயல்பாக இருக்குமாம்!

புதுதில்லி: இந்த ஆண்டு பருவ மழை 97 சதவீதம் இயல்பானதாக இருக்கும், பற்றாக்குறையாக இருக்க வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.




இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநர் கே.ஜே.ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


''2018 ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென் மேற்கு பருவமழை நீண்டகால சராசரியில் 97% இயல்பானதாகவே இருக்கும்.

இந்த ஆண்டு பற்றாக்குறை மழை பெய்ய வாய்ப்பு கிடையாது. இயல்பான மழை 42% பெய்வதுக்கு சாத்தியமுள்ளது.





12 சதவீதம் இயல்புக்கும் அதிகமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு பருவமழை இயல்பான நிலையில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.

பருவமழை வழக்கமாக மே இறுதிவாரம், அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இந்த ஆண்டும் அதையொட்டித்தான் இருக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரம் தொடங்கும். தொடர்ந்து 3-வது ஆண்டுகள் நாட்டில் இயல்பான மழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்