• A
  • A
  • A
என் மரணம் வரை உங்களுக்காக இருப்பேன்: ராகுல்

அபுதாபி: என் மரணம் வரை உங்களுக்காக என் வீட்டு கதவும், என் காதும் எப்போதும் திறந்தே இருக்கும் என துபாய் வாழ் இந்தியர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.



காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் முதன்முறையாக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமீரகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அங்குள்ள ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் தொழிலாளர் முகாம் மற்றும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பேரணி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இங்கு பாருங்கள் உயரமான கட்டிடங்களும், ஏணைய தொழிற்சாலைகளும் உள்ளது. இந்த அனைத்திலும் கண்டிப்பாக இந்தியர்கள் பங்கு உள்ளது. உங்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். நானும் ஒரு சாதாரண மனிதன் தான். உங்களுக்கு ஆதராவாக இருப்பேன். என் மரணம் வரை உங்களுக்காக என் வீட்டு கதவும், என் காதும் எப்போதும் திறந்தே இருக்கும். ஒரு போர் தொடங்கியிருக்கிறது. அதில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றார்.

பின், கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பேரணிக்கும், கேரள மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது சிறப்பு நன்றிகள். எனக்கு துபாயில் சிறிதும் சோர்வே தெரியவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்