• A
  • A
  • A
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜன 5., தேர்தல்!

கொழும்பு: பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் பனிப்போர் நிலவி வந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசியலில் குழப்பம் நீடித்து வந்தது.


இதையடுத்து, கடந்த மாதம் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு இலங்கை பிரதமராக ராஜபக்சவை நியமித்தார்.

மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நவம்பர் 16 ஆம் தேதி வரை முடக்கி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரனில் விக்ரமசிங்கே, தன்னை யாரும் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் எனக் கூறியதால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்தது

இந்நிலையில், நாடாளுமன்ற அவைத்தலைவர் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, நவம்பர் 14ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கூட இருந்தது. மேலும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே-சிறிசேனா கூட்டணி வெற்றிபெற 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்பட்டது.

ஆனால் 104 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்ததால் பிற கட்சி எம்.பி.க்களை தங்கள் வசம் இழுக்க ராஜபக்சே பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக கூறப்பட்டது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்ரசிங்கேவிற்கு ஆதரவு தெரிவித்தது. இது சிறிசேனா கூட்டணிக்கு பெரும் பின்னடைவே ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதனிடையே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் ஜனவரி மாதம் 5 தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்