• A
  • A
  • A
பெண் கல்விக்கு உதவி அளிக்க புதிய முயற்சியில் இறங்கும் மிஷெல் ஒபாமா!

சிகாகோ: உலகம் முழுவதும் உள்ள வளரும் இளம்பெண்கள் அனைவரையும், கல்வி எனும் ஆகப்பெரிய சக்தி கொண்டு மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய முயற்சி குறித்து மிஷெல் ஒபாமா பேசியுள்ளார்.



அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கடந்த வியாழக்கிழமை, கல்வி மூலம் உலகம் முழுவதும் உள்ள வளரும் இளம் பெண்கள் அனைவரையும் மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய முயற்சியை அறிவித்தார்.


சிகாகோவில் உள்ள ஒபாமா அறக்கட்டளை சார்பில் மிஷெல் ஒபாமா தனது திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​ஒரு படித்த பெண் தனது குடும்பத்தையும், தனது சமுகத்தையும், தனது நாட்டையும் உயர்த்திக் கொள்வார் என தெரிவித்தார்.

அதனால்தான், உலகெங்கிலும் இளம் பருவக் குழந்தைகளின் கல்விக்கான ஒத்துழைப்பை தர 'உலகளாவிய பெண்கள் கூட்டமைப்பை' ஒபாமா அறக்கட்டளை துவக்கி உள்ளது என்று தான் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.

இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது டிவிட்டர் பக்கத்தில், "உலகளாவிய பெண்கள் கூட்டமைப்பு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்து, மிஷெல் முயற்சியில் மற்றொரு பெரிய அத்தியாயமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

உகாண்டா, மலாவி, இந்தியா, கானா மற்றும் கோத்தமாலாவில் உள்ள பெண்கள் கல்விக்கு பயன் பெறும் வகையில் ஐந்து திட்டங்கள் இப்போது நன்கொடைகளுக்குத் திறந்துவைக்கப்பட உள்ளது எனவும் இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்