• A
  • A
  • A
பெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய் தாக்காது என்பது உண்மையா?

பெண்களை குறிப்பிட்ட வயது வரை இருதய நோய் தாக்காது என்பது உண்மையே.

கோப்புப்படம்



பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் இருதயத்தை பாதுகாக்கக்கூடியது. பெண்களுக்கு மெனோபஸ் வரும் வரை ஈஸ்ட்ரோஜென் இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் காலம் இருக்கும்வரை இருதய நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை. நின்றவுடன் தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.


மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) வருவதன் அறிகுறி:

நடுநெஞ்சின் மையப்பகுதியில் ஒரு அழுத்தம் ஏற்படும். உடம்பில் ஒருவித வியர்வை வரும். சில நேரங்களில் வலியாக இருக்கும். மார்பில் இருந்து இடது மற்றும் வலது கைக்கு இந்த வலி ஊடுருவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆஸ்பிரின் 1 மாத்திரை, குளோபிடோக்ரல் 4 மாத்திரை, அடோர்வாஸ்பிரின் 1 மாத்திரையை கைகளிலேயே வைத்திருக்க வேண்டும். இதனை உடனடியாக வாயில் போட்டுக் கொள்ளலாம். பிறகு உடனடியாக பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும்.



மாரடைப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்:


தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மிகவும் அவசியம். ரிலாக்ஸாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேச வேண்டும். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், மனதளவில் அழுத்தமே இருக்கக்கூடாது.

35 வயதில் இருந்தே சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யவேண்டும்.

இருதய ரத்தக்குழாய் அடைப்பை சரி செய்வதற்கு சரியான சிகிச்சை முறை என்ன?



3 வகையான சிகிச்சைகள் உள்ளன. முதலில் மருந்துகளை கொடுத்து சரி செய்வது, ஸ்டென்ட் வைப்பது, முன்றாவதாக ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்வது. சாதாரணமாக இருந்தால் மருந்து மாத்திரை மட்டும் போதும்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்