• A
  • A
  • A
என் மனைவி தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்: ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எனக்குத் தாம்பத்ய உறவில் நாட்டம் குறையவில்லை. ஆனால் என் மனைவிக்கு அதில் ஆர்வமே இல்லை. உதட்டு முத்தம் கொடுத்தால்கூட, அவளுக்குப் பிடிப்பதில்லை. தாம்பத்ய உறவின்போது, உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். அவளுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்.

கோப்புப்படம்



பதில்: உங்கள் மனைவியின் “நோ ரியாக்ஷன்“ நிலைக்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கலாம்.


1. உடலில் ஏற்படும் ரசாயனக் கோளறுகளால் விளையும் உபாதைகள், உதாரணத்துக்கு நீரிழிவு நோய் (டயாபெடிஸ்), ரத்தக் கொதிப்பு, தைராய்ட் சுரத்தலில் குறைபாடு, மனச்சோர்வு, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவை.



தாம்பத்யம் என்பது உடல் ரசாயனங்களின் ஒருங்கிணைந்த கச்சேரி. அந்த ரசாயனங்களில் ஏதேனும் அபஸ்வரம் நேர்ந்தால், கச்சேரியே களை இழந்துவிடுகிறது. இது தொடராமல் இருக்கவேண்டுமானால் உங்கள் மருத்துவரை அணுகி, உடல் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சையும் செய்துகொண்டால், கூடிய சீக்கிரமே ரசாயனங்கள் ஸ்ருதி சேர்ந்து கச்சேரியும் அமர்க்களப்படும்!

2. உள்ளத்தில் ஏற்படும் ஊமைக்காயங்களால் உளைச்சல்கள் உண்டாகின்றன. உடற்கோளாறுகளை விட இந்த உள்ளக் கோளாறுகள்தான் பெரும்பாலான தாம்பத்ய பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. பொதுவாக பெண்ணின் மனநிலை, தாம்பத்யத்தை அன்பின் வெளிப்பாடாகவே பாவிக்கிறது. அன்பின் வெளிப்பாடாக தன் பங்குக்கு அவள் எதிர்பார்ப்பது, அவளையும் அவள் சுற்றத்தாரையும் தகுந்த மரியாதையுடன் நடத்துவது, அவள் பணிகளில் உதவுவது, அவளது பொருளாதாரத் தேவைகளை முடிந்த மட்டும் பூர்த்தி செய்வது, அவளுடன் பேச நேரம் ஒதுக்கி - பாராட்டு, புலம்பல், புரளி என்று அவள் எதைப் பேசினாலும் காது கொடுத்துக் கேட்பது (கஷ்டம்தான், குறைந்தபட்சம் கேட்பதுபோல நடிப்பது!) படுக்கையைத் தவிரவும் மற்ற சந்தர்ப்பங்களில் அவளைக் கண்டுகொள்வது... இப்படி காமம் சாராத பல தருணங்களில் அவளிடம் பக்குவமாக நடந்துகொண்டால்தான், அவளது இனம்சேரும் ஸ்விட்ச் இணக்கமாக இயங்கும்.

அதை விட்டுவிட்டு, இந்த னான் செக்சுவல் சமாசாரங்களில் அவளுக்கு அதிருப்தி ஏற்படும்படி நடந்துகொண்டால் போச்சு! “இதுக்கு மட்டும்தான் நானா?“ என்று முக்கியமான நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்.

இந்த உளவியல் உண்மைகளை கிரகித்துக் கொண்டு, உங்கள் மனைவியுடன் நீங்கள் இதுவரை கொண்டுள்ள னான் செக்சுவல் உறவில் ஏற்பட்டிருக்கும் - நீங்கள் இதுவரை இதெல்லாம் ஒரு மேட்டரா என்று அசட்டையாகப்



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்