• A
  • A
  • A
அச்சு அசலாக பெண்ணாக மாறிய கமல் பட நடிகர்!

மலையாளப் படம் ஒன்றில் அச்ச அசலாக இளம் பெண்ணாக மாறி நடிப்பில் அசத்தியுள்ளார் நடிகர் ஜெயசூர்யா.



திரைப்படங்களில் ஹீரோக்கள் பெண் வேடத்தில் நடிப்பது புதிதல்ல. ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஷால் என பல்வேறு முன்னணி நடிகர்கள் ஒரு படத்திலாவது சில காட்சிகளில் தோன்றி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


அந்த வகையில், படம் முழுவதும் நடிகர் ஒருவர் பெண்ணாக தோன்றுவது என்பது அரிதான விஷயமாக உள்ளது. அவ்வாறு 'அவ்வை சண்முகி' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கமல்ஹாசன், ஒரு வேடத்தில் மாமியாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் 50 வயதைக் கடந்த மாமி போன்றே தோற்றம் மட்டும் இல்லாமல், நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருப்பார்.

இந்நிலையில், கமலைப் போன்று பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யா மலையாளப் படம் இளம் பெண் போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார். 27 வயது நிரம்பிய அவரது மனம் பெண்ணாக இருப்பதாகக் கூறி அதற்கான சிகிச்சை செய்து பெண்ணாக மாறுகிறார். இதன் பின்னர் அவர் சந்திக்கும் சவால்களும், அதனைக் கடந்து செய்யும் சாதனைகளையும் மையப்படுத்தி 'எஞ்ஞான் மரிக்குட்டி' என்ற படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெறும் காட்சிகளில் பார்ப்பதற்கு அச்ச அசலாக பெண் போன்று தோற்றமளிக்கிறார் ஜெயசூர்யா. சேலை அணிந்து அவர் நலிமாக நடக்கும் நடை ஒரு பெண்ணின் நடையை உறித்து வைத்தது போல் அமைந்திருக்கிறது.

இந்த ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சக்கரவியூகம், மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வரிசையில் தற்போது மன ரீதியாக பெண்ணாக செயல்படும், ஒரு ஆணின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 'எஞ்ஞான் மரிக்குட்டி' படத்தில் நடிக்கிறார். படத்தில் ஜுவல் மேரி என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ரஞ்சித் சங்கர் இயக்குகிறார்.