• A
  • A
  • A
சூர்யா ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் தீபாவளி பரிசு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'என்ஜிகே' படத்தின் ஷுட்டிங் முடிந்துவிட்டாதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



சூர்யா - செல்வராகவன் கூட்டணி

ஏராளமான ரசிகர்களை கொண்ட இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் 'என்ஜிகே'. நந்த கோபால குமாரன் என்ற பெயரின் சுருக்கமே என்ஜிகே.



நட்சத்திர பட்டாளங்களுடன் என்ஜிகே


இந்தப் படத்தில் கதாநாயகிகளாக சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் சரத்குமார், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

ஷுட்டிங் நிறைவு

இதையடுத்து படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது சூர்யா புதிய தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஹாப்பி தீபாவளி எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே படம் தீபாவளி ரிலீஸாகும் வெளியாகும் எனத் தெரிகிறது. பொலிட்டிக்கல் திரில்லர் படமாக என்ஜிகே உருவாகி வருகிறது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்