• A
  • A
  • A
சூப்பர் சிங்கர்களை நேரடியாக தேர்வு செய்யும் இளையராஜா!

சென்னை: கல்லூரி மாணவிகள் 9 பேரை தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா.



சமீபகாலமாக இளையராஜா கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இதில் கடந்த சில வாரங்களாக எத்திராஜ் மற்றும் ராணி மேரி கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கு மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் தனது பிறந்தநாளை கொண்டாடியதோடு, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது சில மாணவிகள் இளையரஜா இசையில் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும், தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து, தற்போது இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் சிலரை குரல் சோதனை செய்தார். இதில் நன்றாக பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது மாணவிகளும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்