• A
  • A
  • A
நான் ஏன் புலிகேசி 2ம் பாகத்தில் நடிக்கமாட்டேன்? வடிவேலு விளக்கம்

சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்கமாட்டேன் என்று கூறிய வடிவேல் நடிகர் சங்கத்துக்கு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார்.



நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஷங்கர் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.


இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, 2ம் பாகம் எடுப்பது குறித்தான பேச்சு அடிபட்டது. பின்னர், 2016ம் ஆண்டு இந்த படத்தின் 2ம் பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசிக்கான வேலைகள் தொடங்கியது. முதல் பாகத்தை தயாரித்த ஷங்கர், இந்த முறை லைகா புரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்து இந்த படத்தை தயாரித்தார்.

பின்னர், படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் வடிவேலு பாதியிலேயே படத்தில் இருந்து விலகினார். இதனால், படம் மேற்கொண்டு நகரவில்லை. இதனால், படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்திருந்தார்.

அதன் நீட்சியாக தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு இரண்டு முறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பிருந்தார்.

அதில் வடிவேலு கூறியிருப்பதாவது,

“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.

ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.

அத்துடன், கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 - 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  முக்கிய நகரங்கள்