• A
  • A
  • A
இயக்குநர் பாலச்சந்தரின் வீடு ஏலம் - கவிதாலயா நிறுவனம் மறுப்பு

இயக்குநர் பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலத்தில் விடப்படுகிறது என வெளியான செய்திகள் பொய்யானவை என்று கவிதாலயா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்



தமிழின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரின் குரு என்ற பெருமைக்குறியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர். அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் ஆகியவை ஏலம் விடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானவை என கவிதாலயா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீடு ஏலம் தொடர்பாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை. வணிக நோக்கங்களுக்காக யூகோ வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதாகவும், எஞ்சிய தொகையை வரும் மார்ச் மாதத்துக்குள் செலுத்தும் வகையில் வங்கியுடன் சட்டரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் வங்கியின் வழக்கமான நடைமுறைகள் சார்ந்த நோட்டீஸை பார்த்து உண்மை இல்லாத செய்திகள் பரவியுள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்