• A
  • A
  • A
பேட்ட...விஸ்வாசம்...வசூலில் முந்தியது யார்?

நேற்று வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் தற்போது வெளியாகியுள்ளது.



ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட மற்றும் அஜித்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாரான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் நேற்று ரிலீசானது. இதனால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக இரு படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி சினிமா பாக்ஸ் ஆபிஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலின் படி தமிழகத்தில் ''பேட்ட'' திரைப்படம் முதல் நாளில் 18 கோடி வசூல் செய்துள்ளதாகவும், ''விஸ்வாசம்'' படம் சுமார் 20 கோடி வசூல் செய்ததாகவும் கூறியுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் விஸ்வாசம் படம் 57,195 டாலர்களும், கனடாவில் 20,960 டாலர்களும் வசூலித்துள்ளது. பேட்ட திரைப்படம் கனடாவில் 46,620 டாலர்களும், அமெரிக்காவில் 5,57,386 டாலர்களும் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இருப்பினும், மற்ற மாநிலங்களின் கலெக்‌ஷன் விவரங்கள் வெளியான பிறகே வசூல் குறித்து ஒட்டு மொத்த தகவல்களும் தெரியும் எனக் கூறப்படுகிறது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்