• A
  • A
  • A
'பிளாக் விடோ'வின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

மார்வல் ஸ்டுடியோவின் அடுத்த படமான 'பிளாக் விடோ'வில் நடிக்க பெண் அவெஞ்சர் ஸ்கார்லட் ஜான்சனுக்கு ஒருநாள் சம்பளமாக 1.5 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.



ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதித்த நடிகைகளின் பட்டியலில் 'அவென்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸ்கார்லட் ஜான்சன் முன்னிலை வகிக்கிறார்.


2010இல் வெளியான 'ஐயர்ன் மேன் 2', 2012இல் வெளிவந்த 'தி அவென்சர்ஸ்', 2014இல் வெளிவந்த 'கேப்டன் அமெரிக்கா' உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஸ்கார்லட் ஜான்சன்.

இந்நிலையில் மார்வல் ஸ்டுடியோவின் அடுத்த படமான 'பிளாக் விடோ'வில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு ஒருநாள் சம்பளமாக 1.5 கோடி ரூபாய் தரப்படுகிறது.

'கேப்டன் அமெரிக்கா'வில் நடித்த கிறிஸ் இவான், கிறிஸ் ஹிம்ஸ்வர்த்துக்கு வழங்கும் சம்பளம் தற்போது ஸ்கார்லட் ஜான்சன் பெறுகிறார் என்று ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பள இடைவெளி என்பது ஹாலிவுட்டில் ஒரு பரவலான விவாத பிரச்னையாக இருக்கின்றன. இதற்கு எதிராக ஈமா ஸ்டோன், நாட்லீ புரொட்மேன்,ஜெனிஃபர் லாரன்ஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஊதிய இடைவெளியைப் பற்றி குரல் கொடுத்து வருகின்றனர்.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  முக்கிய நகரங்கள்