• A
  • A
  • A
'உன் படங்களிலேயே காலா தான் பெஸ்ட்'- பா.ரஞ்சித்துக்கு வெங்கட்பிரபு பாராட்டு

காலா படத்தை பார்த்து வியந்த இயக்குநர் வெங்கட் பிரபு,உனது படங்களில் காலாதான் பெஸ்ட் என பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வியாழனன்று வெளியாகி தியேட்டர்களில் வசூலை குவித்து வருகிறது.


கரிகாலனாக நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இயக்குர் பா.ரஞ்சித் -ஐ பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் வரிசையில், காலா படத்தை முதல் நாளே பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டில் கூறியதாவது,

" என்ன ஒரு திரைப்படம்! மிகவும் நேசித்தேன். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ரஞ்சித். என்ன ஒரு முதிர்ச்சி. எத்தகைய படைப்பு. என்னே ஒரு பிரம்மாண்டம். வியத்தகு நடிப்பாற்றல்கள்! சமநிலைப் பார்வை.

என்னைப் பொருத்தவரை உனது படைப்புகளிலேயே இதுதான் சிறப்பானது என்பேன். தலைவா(ரஜினி) லவ் யூ. தொழில்நுட்ப ரீதியாகவும் படம் திறன் மிக்கதாக உள்ளது.

நானா படேகர், ஈஸ்வரிராவ், சமுத்திரகனி ஆகியோரது நடிப்பு சிறப்பு. திலீபன், மணிகண்டன், மற்றும் அவரது தோழியாக நடித்த பெண் ஆகியோருக்கும் சிறப்புப் பாராட்டுகள். கதையின் மீது நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு நன்றி தனுஷ்" என்று தெரிவித்துள்ளார்.



ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28 முதல் கோவா படம் வரையில் உதவி இயக்குநராக இருந்தவர் பா.ரஞ்சித். அவரிடம் பணியாற்றி, சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டாவது படத்தையும் வெளியிட்டுள்ளதை மிகவும் பெருந்தன்மையுடன் தனது ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

இதற்கு பா.ரஞ்சித், தனக்கே உரிய பாணியில் "ரொம்ப மகிழ்ச்சி" என்று பதில் செய்தி பதிவிட்டுள்ளார்.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்