பாடுபட்டு பராமரிக்கும் நீச்சல் உடை அழகு தோற்றத்துக்கான என் உடலமைப்பை ஏன் நான் மறைக்க வேண்டும் என்று நடிகை நிகிதா கூறினார்.
கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இந்திய அழகி போட்டியில் இறுதிகட்ட போட்டிக்கு நுழைந்தவர் நிகிதா தத்தா. மாடல் அழகியாக இருந்த இவர் பிறகு திரைப்பட நடிகையாக மாறினார். லேகர் ஹம் தீவானா தில், கோல்ட் என 2 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
இது தவிர டிவியிலும் ட்ரீம் கேர்ள், ஏக் துரே கி வாஸ்தே தொடர்களில் நடித்தார். தற்போது ஹாசில் தொடரில் நடித்து வருகிறார். பொதுவாக டி.வியில் நடிக்கும் நட்சத்திரங்கள் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் சமீபத்தில் இவர் டி.வியில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார் நிகிதா.
இதுகுறித்து நிகிதா கூறியதாவது:
சினிமாவுக்கு எந்தவிதத்திலும் டிவி குறைந்ததில்லை என்று நான் கருதுகிறேன். அதனால் தான் சின்னத்திரையில் நீச்சல் உடையில் நடித்தேன். மிஸ் இந்தியா போட்டியில் நான் பங்கேற்றிருக்கிறேன்.
மேலும் நீச்சல் உடை அணிவதற்கு ஏற்ற உடல் தோற்றத்தை கடுமையான பயிற்சிகள் செய்து பராமரித்து வருகிறேன். பாடுபட்டு பராமரிக்கும் நீச்சல் உடை அழகு தோற்றத்துக்கான என உடலமைப்பை ஏன் நான் மறைக்க வேண்டும். என் உடல் அழகை ரசிகர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.