• A
  • A
  • A
நடுரோட்டில் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: மதுரையில் பரபரப்பு!

மதுரை: பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞரை மர்மகும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் வரிச்சூர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை சிவகங்கை சாலையில் விளத்தூர் கிராமத்தை நெருங்கியபோது இரண்டு கார்களில் வந்த மர்மகும்பல் நடுரோட்டில் அரவிந்தை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி வீழ்த்தியுள்ளனர்.


படுகாயங்களுடன் சுருண்டு விழுந்த அவரது உடலை அவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது இட்டு பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் எரித்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

நடுரோட்டில் இருசக்கர வாகனத்துடன் ஒருவரின் உடல் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட அரவிந்தின் சகோதரர் வசந்த் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

அதனால் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸார் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கருப்பாயூரணி காவல் துறையினர் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் மாவட்ட நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்