• A
  • A
  • A
தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்: ஆபாச படத்தால் விபரீதம்!

புதுதில்லி: பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது சொந்த தங்கையையே, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சித்தரிக்கப்பட்ட படம்



புதுதில்லியில், ஒரு தம்பதிக்கு 14 வயது சூர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகனும், 8 வயது பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகளும் இருக்கின்றனர்.


இந்நிலையில், சூர்யா வீட்டில் உள்ள ஸ்மார்ட் போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளான். சம்பவத்தன்று பெற்றோர்கள் அவனிடம் ஸ்மார்ட் போனை கொடுத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் வெளியே சென்ற சூர்யா தனது நண்பர்களுடன், ஸ்மார்ட்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளான்.

பின்னர், வீட்டுக்கு வந்த சூர்யாவுக்கு தான் பார்த்த ஆபாச படங்களின் எண்ணம் தோன்றியது. இதையடுத்து, வீட்டில் தனியாக இருந்த தனது தங்கை பானுவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால், பானு கடுமையான காயம் அடந்தார், இதில் பயந்து போன சூர்யா அங்கிருந்து தப்பியோடினான்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் பானு வலியால் துடிப்பதை கண்டு உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள் என கூறினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் சிறுமியின் சகோதரனிடம்விசாரணை நடத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  முகப்பு

  தமிழ்நாடு

  இந்தியா

  உலகம்

  குற்றம்

  விளையாட்டு

  சினிமா

  பல்சுவை

  உணவு

  பெண்ணுலகம்

  கேலரி

  சுற்றுலா

  ਪੰਜਾਬ ਨਿਊਜ਼

  മലയാളം ന്യൂസ്

  முக்கிய நகரங்கள்