• A
  • A
  • A
மயக்க ஊசி போட்டு நர்சிங் மாணவியை சீரழித்த காம கொடூர மருத்துவர் கைது

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக சென்ற நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டார்.



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர் பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் செவிலியர் (நர்சிங்) படித்து வருகிறார்.


கடந்த 2 மாதங்களாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏஆர்ஆர் என்ற மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவர் ரவீந்திரன் கடந்த 5ம் தேதி பவித்ராவுக்கு 2 மயக்க ஊசிகளை செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, உடன் பணிபுரியும் பயிற்சி மாணவிகள், கோவை உக்கடத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர் ரவீந்திரனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து வியாழக்கிழமை மகளிர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

மருத்துவர் ரவீந்திரனுக்கு வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து ரவீந்திரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.